
குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கிராண்ட்பாஸ்,சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதிக்கு அருகில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 27 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
CATEGORIES Sri Lanka

