பாடசாலை மாணவர்களின் ஆளுமை விருத்தி தொடர்பான செயலமர்வு கண்டியில் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களின் ஆளுமை விருத்தி தொடர்பான செயலமர்வு கண்டியில் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களின் ஒழுக்க நெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா செயலகம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மனப்பாங்கு மற்றும் ஆளுமை விருத்தி வேலைத் திட்டத்தின் மத்திய மாகாண அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் (25) கண்டி கல்வி வலயத்தில் ஐந்து பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்காக தெரிவு செய்யப்பட்ட நான்கு நாட்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது.

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும்

முதலாம் கட்டத்தின் கீழ் கண்டி வலயத்தின் வத்தேகம, கடுகஸ்தோட்டை, தெல்தெனிய மற்றும் கங்குரண்கெத ஆகிய வலயங்களை உள்ளடக்கியதாக மாணவர்கள் கலந்து கொண்டதுடன், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் தெனுவர மற்றும் கொத்மலை மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் வலப்பனை மற்றும் ஹட்டன் வலயங்களும், நான்காம் கட்டத்தில் நாவல, மாத்தளை மற்றும் பில்காம ஆகிய கல்வி வலயங்களின் மாணவர்களும் கலந்து கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )