மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது.  

இந்த எச்சரிக்கை நேற்று (27) மாலை 4:00 மணி முதல் இன்று (28) மாலை 4:00 மணி வரையிலான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  

இதற்கமைய, அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை (Orange) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:  

காலி மாவட்டம், கண்டி மாவட்டம், கேகாலை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம்

இதேவேளை விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள முதலாம் நிலை (Yellow) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:  

கொழும்பு மாவட்டம்,காலி மாவட்டம்,களுத்துறை மாவட்டம்,கண்டி மாவட்டம்,கேகாலை மாவட்டம்,குருநாகல் மாவட்டம்,மாத்தளை மாவட்டம்,மாத்தறை மாவட்டம்,நுவரெலியா மாவட்டம்,இரத்தினபுரி மாவட்டம்  

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )