
பாப்பரசரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வத்திக்கான் புறப்பட்டார் விஜித
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார்.
இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிஹாட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அமைச்சர் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் வத்திக்கானுக்கு பயணிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

