4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை குறித்த எச்சரிக்கை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கங்கை இஹல கோரள, கண்டி மாவட்டத்தில் பஸ்பகே கோரள, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )