புதையல் தோண்டிய நால்வர் கைது

புதையல் தோண்டிய நால்வர் கைது

தனமல்வில, பட்டுவேவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (13) சனிக்கிழமை காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 45 முதல் 58 வயதுக்குட்பட்டவர்களாகவும், ஹிங்குராண, அம்பலாந்தோட்டை மற்றும் மஹாவேவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )