குரோக்பீடியாவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்

குரோக்பீடியாவை அறிமுகம் செய்த எலான் மஸ்க்

விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற புதிய தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.

இந்த குரோக்பீடியாவில் முழுக்க முழுக்க ஏஐ- யால் சரிபார்க்கப்பட்ட ஏஐ பதிவுகள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிபீடியாவை பொறுத்தவர்களை தகவல்களை யார் வேண்டுமானாலும் அப்டேட் செய்யலாம். இதனால், இந்த தரவுகள் சில நேரங்களில் சார்புள்ள பதிவுகளாக இருப்பதாக கூறியிருக்கும் எலான் மஸ்க், சார்பில்லாத தரவுகளை பெற குரோக்பீடியாவை நிறுவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அறிமுகம் ஆகியிருப்பது 0.1 வெர்ஷன் தான் என்றும் இதுவே விக்கிபீடியாவை விட சிறப்பானதாக இருக்கும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )