
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 4923 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (29) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் 17 பேரும், சந்தேகத்தின் பேரில் 796 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 259 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 188 பேரும்,மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 31 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 40 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4923 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

