தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து

தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் நேற்று (29) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களினால் ஏற்பட்டதா? என விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

image

குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்த அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புப் படையினர் வருகை தந்திருந்தனர்.

மேலும் சம்மாந்துறை பொலிஸார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காப்பு குழுவினர், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள் , தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

image

குறித்த தீ விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுவதுடன், பல பொருட்கள் தீயில் எரிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )