கெஹெல்பத்தர பத்மேவிற்கு உதவியதாக கூறப்படும் பெண் சட்டத்தரணி தொடர்பில் வெளியாகியுள்ள மேலதிக தகவல்

கெஹெல்பத்தர பத்மேவிற்கு உதவியதாக கூறப்படும் பெண் சட்டத்தரணி தொடர்பில் வெளியாகியுள்ள மேலதிக தகவல்

நீதிமன்றதிற்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவியாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளில் முன்னிலையாகியிருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த பெண் சட்டத்தரணிக்கு கெஹெல்பத்தர பத்மே இலட்சக்கணக்கான பணத்தை கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சட்டத்தரணியின் வங்கிக் கணக்குகள், தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேகநபரான 55 வயதுடைய இந்த பெண் சட்டத்தரணி கடந்த ஜூன் மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் வழியாக துபாய் சென்று திரும்பியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு
உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 55 வயதுடைய இந்த பெண் சட்டத்தரணி கொலைக்கு பயன்படுத்தப்பட துப்பாக்கியை மறைத்துவைக்க சட்டப்புத்தக பிரதியை வழங்கியதுடன் . சட்டத்தரணிகள் அணிந்து கொள்ளும் இரண்டு டைகளையும் துப்பாக்கிதாரி அணிந்துகொள்ள வழங்கியுள்ளார் .

மேலும் , சட்டத்தரணிகள் நீதிமன்ற வளாகத்தினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்படும் வகையில் வாகனங்களில் ஒட்டப்படும் அனுமதி பத்திரத்தையும் துப்பாக்கிதாரிக்கு வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தனக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மற்றுமொரு போலியான அடையாள அட்டையை தயாரித்த அந்த பெண் சட்டத்தரணி அதனை கொலையாளிக்கு வழங்கியதாகவும் போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அந்த அடையாள அட்டையில் சந்தேக நபரான குறித்த பெண் சட்டத்தரணியின் கையொப்பம் இடப்பட்டுள்ளதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஹெஹெல் பத்தர பதமேயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இந்த பெண் சட்டத்தரணி தொடர்பாக தெரிய வந்ததாகவும் இதனை உறுதிப்படுத்துவதற்காக இஷாரா செவ்வந்தியிம் விசாரித்த போது செவ்வந்தியும் அதனை உறுதிப்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )