பொதுமக்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு சனிக்கிழமை முடிந்து, ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்

பொதுமக்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு சனிக்கிழமை முடிந்து, ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும், மேலும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்

மேலும் அவர் , நாட்டின் எரிபொருள் நுகர்வை 20% குறைக்க கியூ.ஆர். குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் ஒரு நாளைக்கு சராசரியாக 4,800 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 4,045 மெட்ரிக் தொன் பெட்ரோல் நுகரப்படுகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முறைமை அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தின் கிடைக்கும் எரிபொருள் மற்றும் தற்போதைய கையிருப்பின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாத கடைசி வாரம் வரை போதுமான எரிபொருள் இருப்பதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )