எரிபொருள் விலையில் மாற்றம் !

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

அதற்கமைய , ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 294 ரூபாவாகும்.

அதேபோல், லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

மேலும் , வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 277 ரூபாயாகவும் , ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 335 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 180 ரூபாயாகவும் மாற்றமின்றி அதே விலையில் நிலவுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )