
இன்று முதல் அமுலுக்கு வரும் ஷொப்பிங் பை சட்டம்
கடைகளில் பொருட்களை வாங்கும் போது கைப்பிடிகள் கொண்ட பாலிதீன் பைகளுக்கு இன்று முதல் நுகர்வோர் தனியாக பணம் கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பிடிகள் கொண்ட பாலிதீன் பைகளுக்கு (shopping bags )
விற்பனை நிலையங்கள் நுகர்வோரிடம் பணம் அறவிடவேண்டும் என்ற வர்த்தமானி அறிவிப்பு இன்று முதல் அமல்படுத்தப்படும்.
இதனடிப்படையில் இனி நுகர்வோருக்கு பொருட்களை விற்கும்போது, கைப்பிடிகள் கொண்ட பாலிதீன் பைகளுக்கு அந்த கடைகள் விலை வசூலிக்க வேண்டும் என வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.
பொலிதீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், பாலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிதீன் பைகள் இலவசமாக வழங்கப்படமாட்டாது என இந்த வர்த்தமானி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் கூறினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பங்களிக்க நுகர்வோர் கடமைப்பட்டுள்ளனர்.
கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்கும்போது, வீட்டிலிருந்து பொருத்தமான பையை எடுத்துச் செல்லுங்கள்,” என்று பேராசிரியர் திலக் ஹேவாவசம் மேலும் தெரிவித்தார்.

