மாடியிலிருந்து எச்சில் துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு

மாடியிலிருந்து எச்சில் துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ்பண மாடி வீடொன்றில் எச்சிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ் ,நீர்வேலி,அச்செழு பகுதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி அதிக மழை பெய்ந்துகொண்டிருந்த போது வீட்டின் மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த குறித்த நபர், வெற்றிலை எச்சிலை துப்புவதற்காக கட்டிடத்தின் முகப்பு பகுதிக்குச் சென்றவேளை கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )