
அம்புலன்ஸ் – மூன்று சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து ; ஒருவர் பலி
குருநாகல் – குளியாபிட்டி வீதியின் லபுயாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில், நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

