
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டு ; ஈரானில் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரான் இன்று (18) மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.
கோருஷ் கிவானி என்ற நபர், 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘பன்னிரண்டு நாள் போர்’ காலத்தில் கைது செய்யப்பட்டவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர், ஈரானின் முக்கிய இடங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்-க்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் டெல் அவிவில் பயிற்சி பெற்ற பின்னர் அவர் ஈரானுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூன் 13 முதல் 24 வரை நீடித்த ‘பன்னிரண்டு நாள் போர்’, இஸ்ரேல் ஈரானின் இராணுவ மற்றும் அணுசக்தி நிலையங்களை தாக்கியதன் பின்னர் ஆரம்பமாகி, அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தத்தால் முடிவடைந்தது.
CATEGORIES World News

