“நான் உயிருடன் இருக்கிறேன்” ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு

“நான் உயிருடன் இருக்கிறேன்” ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக பரவிய தகவல்களை இஸ்ரேல் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நெதன்யாகு பேசும் மற்றும் பொது இடங்களில் காணப்படும் சில வீடியோக்கள் வெளியாகினாலும், அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி உடன் நெதன்யாகு உரையாடும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், “நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்னை அனுப்பினார்” என ஹக்கபி கூற, அதற்கு பதிலளித்த நெதன்யாகு “நான் உயிருடன் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் மூத்த அதிகாரிகள் அலி லாரிஜானி மற்றும் கோலம்ரேசா சுலைமானி தொடர்பான தாக்குதல்களை குறிப்பிட்டும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )