
யாழில் கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – உடுத்துறை, வேம்படி கடற்கரை பகுதியில் இன்று மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
தற்போது கடலில் நிலவி வரும் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான நிலை காரணமாக, குறித்த பொருள் கடலிலிருந்து அடித்துவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மர்மப் பொருளின் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மேலும், சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

