போதைப்பொருளுடன் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

புத்தளம், முல்லினகர் பிரதேசத்தில் உள்ள ஒரு கிடங்கில் வைத்து 03 கிலோ 290 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் (09) கைது செய்துள்ளது.

அந்தப் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் குழுவொன்று குறித்த கிடங்கைச் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்போது, அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில், குறித்த இடத்தில், போதைப்பொருளுடன் மின்சார தராசும் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடையவர் என்பதோடு, அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் பொலிஸ் நிலையத்தால் சந்தேகநபர் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )