
தேசிய விஞ்ஞான வாரம் ஆரம்பம்
நவம்பர் 10 ஆம் திகதிய உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய விஞ்ஞான தினக் கொண்டாட்டம் மற்றும் தேசிய விஞ்ஞான வாரம் நேற்று (10) பத்தரமுல்லையில் உள்ள வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தை நோக்கி: இலங்கையின் நாளைக்கான விஞ்ஞானம்” என்பது இந்த ஆண்டு விஞ்ஞான வாரத்தின் கருப்பொருள்.
விஞ்ஞானத்தைப் பிரபலப்படுத்தவும் விஞ்ஞானக் கல்வியறிவை அதிகரிக்கவும், நவீன விஞ்ஞான் ஆராய்ச்சி மற்றும் புதுமை உட்பட உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப போக்குகள் பற்றிய அறிவையும் புரிதலையும் பரப்புவதன் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, சமூகத்தில் விஞ்ஞானத்தைப் பிரபலப்படுத்தவும், கல்வியறிவை அதிகரிக்கவும், உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை செயல்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய விஞ்ஞான வாரத்தின் உத்தியோகர்பூர்வ தொடக்கத்தைத் தொடர்ந்து, முதல் திட்டமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கொள்கை உருவாக்கம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான விஞ்ஞான அணுகுமறைகளை அடையாளம் காண்பது குறித்து, துறை சார் பங்கேற்புடன் இரண்டு விரிவான அறிவியல் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

