புதிய தேர்தல் ஆணையர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய தேர்தல் ஆணையர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய தேர்தல் ஆணையர் நாயகமாக திரு. ரசிக பீரிஸ் இன்று (14) பதவியேற்றார்.

முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்தும், அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் நாயகமாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க  2019 ஒக்டோபர் 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டார், அதன் பின்னர் தனது பதவிக் காலத்தில் தேசிய மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதில் முன்னணிப் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )