பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ பொதிகள் மீட்பு

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ பொதிகள் மீட்பு

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து வந்த இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்தப் பொதிகள் மீட்கப்பட்டன. 

மீட்கப்பட்ட இந்தப் பொதிகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )