தெதுரு ஓயா மற்றும் பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

தெதுரு ஓயா மற்றும் பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தலா ஒரு அடி வீதம் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 1,400 கன அடி நீர் வெளியேற்றப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை , இன்று காலை முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொல்கொல்ல மகாவலி அணை பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஒவ்வொரு கதவினூடாகவும் 18 அங்குலம் வீதம் வினாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கொல்ல மற்றும் மகாவலி அணையின் தாழ் நிலப் பகுதியில் வசிக்கும் மக்கள் மகாவலி நதியைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொல்கொல்ல மகாவலி அணை பொறியாளர் அலுவலகம் கேட்டுக்கொள்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )