
மலையக ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு 8.30ற்கு புறப்படும் இரவு நேர தபால் ரயிலும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு 6.30இற்கு புறப்படும் இரவு நேர தபால் ரயிலும் இன்று இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
எனினும் , நாளை காலை 9.45 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்கப்படும் ரயில் எண் 1007 மற்றும் காலை 10.20ற்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் ரயில் எண் 1008 ஆகியவை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர மலையகப் பாதையின் ஏனைய அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் மண் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தமையால் கடந்த இரண்டு நாட்களாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன .
CATEGORIES Sri Lanka

