
தொடர்ந்தும் அபாயகரமாக அதிகரித்து வரும் களனி கங்கை நீர் மட்டம்பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுபொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருவதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்
, கிளென்கோர்ஸில் 21.9 மீட்டரை நீர் மட்டம் தாண்டியுள்ளது.
மேலும், ஹன்வெல்ல பகுதியில் 10 மீட்டரைத் தாண்டியுள்ளது.
இந்த பகுதிகள் தற்போது பாரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, வெகுவாக வெள்ள நிலை அதிகரித்து தீவிரமடையக் கூடிய சாத்தியம் இருப்பதால் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி கங்கையை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதோடு, பாதுகாப்ப வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, 29.11.2025 இரவாகும் போது இன்னும் களனி கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வெள்ள நிலைமை தீவிரமடையும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
கங்கைக் கரையை அண்டிய, கொலன்னாவ, கடுவெல, ஹோமாகம, அவிசாவளை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வேகமாகஉயர்வடைந்துள்ளது.இதனால் வீடுகளுக்குள் இருந்து ஆபத்தை எதிர்நோக்குவதை விடுத்து உனடியாக பாதுகாப்பான இடத்தை நோக்கி நகருங்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

