
சீரற்ற வானிலையால் உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு 203 பேரை காணவில்லை 833,985 பேர் பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.
203 பேர் இன்னும் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (29) இரவு 8.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 234,503 குடும்பங்களைச் சேர்ந்த 833,985 பேர் அநர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 34,19 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் தற்போது 919 முகாம்களில் தங்கியுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

