நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கான அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளும் மூடப்பட்டுள்ளன

நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கான அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளும் மூடப்பட்டுள்ளன

பாதகமான வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக நாடு முழுவதும் பல வீதிகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி கூறுகிறார்.

அதன்படி, நாடு முழுவதும் பிரதான வீதிகள் உட்பட 206 வீதிகள் தடைபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

10 பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கான அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளும் தற்போது தடைபட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )