
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு, புறக்கோட்டை சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று திங்கட்கிழமை 319,000 ரூபாவாக இருந்தது.
இன்று (14) காலை 10:30 மணி நிலவரப்படி 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நேற்று திங்கட்கிழமை 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக இருந்தது. இன்றையதினம் 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

