சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு                                                              130 பேர் காணாமல் போயுள்ளனர்                      373,428 பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு 130 பேர் காணாமல் போயுள்ளனர் 373,428 பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

130 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (29) காலை 9 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 102,877 குடும்பங்களைச் சேர்ந்த 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 13,690 குடும்பங்களைச் சேர்ந்த 43,925 பேர் தற்போது 488 தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.

மேலும், கண்டி மாவட்டத்தில் 51 உயிரிழப்புக்களும் , பதுளை மாவட்டத்தில் 35 உயிரிழப்புக்களும், மாத்தளை மாவட்டத்தில் 8 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

கண்டியில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் தற்போது 67 பேர் காணாமல் போயுள்ளனர், இதேவேளை பதுளையில் 27 பேர் காணாமல் போயுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )