கோர தாண்டவமாடிய ‘தித்வா’ சூறாவளி, இலங்கையை விட்டு வெளியேறுகிறது

கோர தாண்டவமாடிய ‘தித்வா’ சூறாவளி, இலங்கையை விட்டு வெளியேறுகிறது

‘தித்வா’ சூறாவளி நாளை 30ஆம் திகதிக்குள் இந்தியாவின் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வாளர் சச்சிந்தா ஜெயசேகர தெரிவித்தார்.

இன்று (29) காலை நிலவரப்படி திருகோணமலையில் இருந்து வடமேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த சூறாவளி, இப்போது வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து நாட்டிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

சூறாவளி வெளியேறியவுடன், நாட்டில் மழை நிலைமைகள் முழுமையாகக் குறையாது எனவும் ஆனால் ஓரளவுக்கு குறையும் என்வும் வானிலை ஆய்வாளர் சச்சிந்தா ஜெயசேகர கூறினார்.

நாளை மழை நிலைமைகளில் குறையும் எனவும் சூறாவளியின் நேரடித் தாக்கம் முற்றிலுமாக நீங்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )