மழை குறைவடைவதால் நிலச்சரிவு அபாயம் அதிகம்-                                           நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை அறிவிப்பு

மழை குறைவடைவதால் நிலச்சரிவு அபாயம் அதிகம்- நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டை பாதித்த கனமழை படிப்படியாக குறைவடைந்து வருவதால், நிலச்சரிவு அச்சுறுத்தல் படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண் அதன் அதிகபட்ச செறிவூட்டல் நிலையை எட்டியுள்ளதால், நிலச்சரிவு அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் காமினி ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதன்படி, மழை நின்ற பிறகு சுமார் 3 நாட்களுக்கு சரிவுகளில் வசிக்கும் மக்கள் நிலச்சரிவுகள், , பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் தாழிறங்குதல் போன்ற ஆபத்தான நிலைகள் ஏற்படக் கூடுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.

நிலச்சரிவுகளைப்பார்வையிட செல்வது மிகவும் ஆபத்தானது என்றும் காமினி ஜெயதிஸ்ஸ அறிவுறுத்தினார் .

அவர் அபாயம் குறித்து மேலும் கூறுகையில் ,

”வீதிகள் நிலச்சரிவு பகுதிகளுக்குக் கீழே உள்ளன. எனவே, மேலே இருந்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.”

மழை குறைந்து சூரியன் வெப்பத்தில் தரை முழுமையாக காயும் வரை இந்த ஆபத்து உள்ளது,” என்று அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )