பொகவந்தலாவில் பாடசாலை பேருந்து விபத்து ; 34 மாணவர்கள் காயம்

பொகவந்தலாவில் பாடசாலை பேருந்து விபத்து ; 34 மாணவர்கள் காயம்

பொகவந்தலாவ பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 34 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கெம்பியன் பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து, காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளானதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெம்பியன் பகுதியில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த இப்பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மண்மேட்டில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )