
பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
இத்தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 31 ஆம் திகதி இணையத்தின் மூலம் வெளியிடப்பட்டிருந்தன.
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரத் தேர்வு, நாடு முழுவதும் 2,362 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் மொத்தம் 281,810 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 221,413 பேர் பாடசாலை மாணவர்கள் என்றும், 60,397 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 176,527 பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS G.C.E. Advanced Level ExaminationSri lankaUniversity Admission ApplicationsUniversity Grants Commission

