இன்று முதல் மழை பெய்யும் குறைவடையும்

இன்று முதல் மழை பெய்யும் குறைவடையும்

“தித்வா” சூறாவளி நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாடு கடற்கரைக்கு சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (30) முதல் தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல் , மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சில நேரங்களில் (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )