இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைத்தார் ஜீவன் தொண்டமான்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைத்தார் ஜீவன் தொண்டமான்

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை-பெயார்லோன் தோட்டத்தில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டடு, பெயார்லோன் தமிழ் வித்தியாலய கட்டிடத் தொகுதியிலும், கவரவிள A மற்றும் B பிரிவுகளை சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்கிவருகின்ற கவரவிள ஆரம்பப் பிரிவு பாடசாலைக்கும் சென்று மக்களை நேற்று (06) நேரில் பார்வையிட்ருந்தார்.

தோட்டப் பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்’ அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த சில நாட்களாக உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது, மேலும் மிகுதியானவர்கள் அனைவருக்கும் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு,

பாடசாலை உடைமைகளை இழந்த மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் என்பன வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொன்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.கா வின் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், இ.தொ.கா உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து செயல்பட்டனர்.

மேலும், கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாடானது மலையக பிரதேச பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் நாட்களுக்குள் முழுமையாக வழங்கி வைக்கப்படவுள்ளதோடு, உதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )