அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் இலங்கை வருகை

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் இலங்கை வருகை

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இன்று (11) இலங்கை வந்துள்ளார்.

அவரது இலங்கைப் பயணத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

துணைச் செயலாளர் ஹூக்கர், இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன் சந்தித்து பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் செழிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வலுவான பங்காண்மையினை அமெரிக்கா மற்றும் இலங்கை பகிர்ந்து வருகின்றன.

இராணுவ, வர்த்தக மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் சுதந்திரமான, திறந்த மற்றும் நிலைத்தடத்துக்குரிய இந்தோ–பசுபிக் பிராந்தியத்தை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

அத்துடன் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான ஆதரவையும் அமெரிக்கா வழங்கி வருவதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை–அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைகிறது என்று அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )