மகேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு மீண்டும் பிடியாணை

மகேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு மீண்டும் பிடியாணை

பணச்சலவை குற்றச்சாட்டுகளுக்கு இணையான விசாரணைகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதை அடுத்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் (11) ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.

குறித்த முறைப்பாடு பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய பணச்சலவை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கு அழைக்கப்பட்டபோது, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெப்ரி அலோசியஸ், கசுன் பலிசேன, பி.எம். குணவர்தன மற்றும் முத்துராஜா சுரேந்திரன் ஆகியோர் நீதிமன்றில் ஆஜரானனர். எனினும், முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் ஆஜராகாததால், அவர்களுக்கு எதிராக மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்க நீதவான் உத்தரவிட்டார்.

சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )