
நாட்டின் 36 பிரதான நீர்த்தேக்கங்களிலும் 46க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்களிலும் தற்போது நீர் வெளியேற்றப்படுகின்றது
நாட்டின் 36 பிரதான நீர்த்தேக்கங்களிலும் 46க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்களிலும் தற்போது நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதான நீர்த்தேக்கங்கள்
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதான நீர்த்தேக்கங்கள்
பதுளை மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்கள்
ஆகியவற்றில் தற்போது நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 பிரதான நீர்த்தேக்கங்கள்
கண்டி மாவட்டத்தில் உள்ள 2 பிரதான நீர்த்தேக்கங்கள் ,
குருநாகல் மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்கள் மொனராகலை மாவட்டத்தில் உள்ள 1 பிரதான நீர்த்தேக்கம்
ஆகியவற்றிலும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 2 முக்கிய நீர்த்தேக்கங்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய நீர்த்தேக்கங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள 1 முக்கிய நீர்த்தேக்கம் ஆகியவற்றிலும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

