
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 981 பேர் கைது
முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட 987 சுற்றிவளைப்புகளின் போதே இந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 513 கிராம் ஹெரோயின், 890 கிராம் ஐஸ், 35,349 கஞ்சா செடிகள் உள்ளிட்ட பெருமளவான போதைப்பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

