ஜனாதிபதி இன்று பாராளுமன்றுக்கு வருகை

ஜனாதிபதி இன்று பாராளுமன்றுக்கு வருகை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்காக நடைபெறும் விவாதத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் வருகை தருகின்றார்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு இன்று நிறைவேற்றப்படவுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )