
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை – கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில், இரண்டு பெரிய கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை நேற்று அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள், நேற்று (22) மதிய நேரத்தில் உயிரிழந்த நிலையில் கடலாமைகள் கரை ஒதுங்கியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடலாமைகள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

