கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 67 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 67 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸ் ஹட்டேவத்த பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அப்பகுதியில் உள்ள ஒரு காலியான காணியிலிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது , துப்பாக்கியை சம்பவ இடத்திற்கு கொண்டு வந்த நபர் யார் என்பது தெரியவந்துள்ளது,
தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 ஐச் சேர்ந்த 67 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பிலியந்தலை பகுதியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கியை யார் கொண்டு வந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை,

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )