
இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட்டர் கோபிநாத் காலமானார்
சென்னையை சேர்ந்த 96 வயதான முன்னாள் இந்திய கிரிக்கெட் கோபிநாத் காலமானார்.
இவர் இந்திய அணிக்காக 1951 முதல் 1960 வரை 8 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், 83 முதல்தர போட்டிகளில் விளையாடி, 4,259 ஓட்டங்களும் 14 விக்கெட்களும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 234 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இவரது 5வது டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவின் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்ற அணியில் இருந்த கடைசி நபரான கோபிநாத்தும் தற்போது காலமாகியுள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் 2வது வயதான டெஸ்ட் கிரிக்கெட்டர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்திருந்தார்.
CATEGORIES India

