6 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது

6 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த குற்றத்திற்காக குறித்த மூவரும் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், 25, 48 மற்றும் 50 வயதுடைய கொழும்பு, வெல்லம்பிட்டிய மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 5.248 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள், அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருள் தொகையுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )