வீதி சமிக்கைகள் குறித்து யாழில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு!

வீதி சமிக்கைகள் குறித்து யாழில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு!

வீதி சமிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு யாழப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.

யாழ்பாணம் பொலிஸாரும் தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் இணைந்து இன்று ஆரிய குளம் சந்தியிலுள்ள வீதிச் சமிக்கையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தனர்.

இதன்போது சந்தியிலுள்ள சமிக்கையில் பாதசாரிகள் கடக்கும் கடவையில் அவர்களுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள வாகனங்களை அகற்றியும் அவர்களை எச்சரித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் வித்தியாசமான முறையில் இவர்கள் வேடமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20260410 WA0008
IMG 20260410 WA0010
IMG 20260410 WA0009
IMG 20260410 WA0006
IMG 20260410 WA0007
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )