
திக்வெல்ல – பெலியத்த வீதியில்டிப்பர் லொறி – பஸ் மோதி விபத்து 30 பேர் காயம்
திக்வெல்ல – பெலியத்த வீதியில் ஹதபான்கொடெல்ல பகுதியில் டிப்பர் லொறி ஒன்றும் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில்
30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீரகெட்டியவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் , மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த டிப்பர் லொறியுடன் நேருக்குநேர் மோதியுள்ளது.
சம்பவம் குறித்து பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

