இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய பெண் நடத்துனர்கள் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய பெண் நடத்துனர்கள் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபையில் சேவை புரிவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 20 புதிய பெண் நடத்துனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை மாக்கும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் நடைபெற்றது.

நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய சீருடையும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன உள்ளிட்ட அதிகாரிகள், புதிய பெண் நடத்துனர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )