
சீனாவில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டது
சீனாவில் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கியுள்ளதை பாரம்பரிய முறைப்படி மக்கள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
விவசாயத்தை போற்றும் விதமாக நடைபெறும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு, நிலத்தில் ஏர் பூட்டி உழுவதற்கான சடங்குகள் செய்து வசந்தத்தை வரவேற்றனர்.
சீன கலாசாரத்தில் ‘வசந்த காலம்’ என்பது புதிய தொடக்கத்தையும், நல்ல விளைச்சலையும் குறிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதையொட்டி பல இடங்களில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய ஊர்வல்கள் போன்ற நிகழ்வுகளும் நடந்தன.
திருவிழாவில் காளைகளுக்கு மாலை அணிவித்து, நிலத்தில் ஏர் பூட்டி உழுவதன் வழியாக இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக அமையும் என மக்கள் நம்புகின்றனர்.
CATEGORIES China

