
வத்தளையில் மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்
வத்தளை, மாபோல தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (06) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

