பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய பற் கமின்ஸ்

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய பற் கமின்ஸ்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் பற் கமின்ஸ் முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான 3ஆவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. பற் கமின்ஸ், 3. மிற்செல் ஸ்டார்க், 4. நொமன் அலி, 5. மற் ஹென்றி, 6. மார்கோ ஜன்சன், 7. ககிஸோ றபாடா, 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. ஸ்கொட் போலண்ட், 10. நேதன் லையன்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )